Powered By Blogger

Wednesday, May 5, 2010

புடவை ?


புடவை !
தோள் சீலை போராட்டத்தின் குழந்தை !
பாரம்பரியத்தின் அடையாளம் புடவை
பிதற்றும் பைத்தியக்காரர்களே !
எது பாரம்பரியம் ?
சபையில் வைத்து உரியப்பட்டது திரௌபதியின் புடவை !
சுடிதார் அணிந்திருந்தால்
என்ன நடந்திருக்கும்
சிந்தித்த்து உண்டா என்னாலும் ?
பேருந்து பயணங்களில்
இடுப்பை கிள்ளும் இழிவு பிறவிகளின்
இச்சைக்கு பிச்சையிடவா
புடவை ?
குணிந்தால் அங்கங்கள் தெரியும் !
ஓடினால் கால்கள் இடறும் !
குணியாமலும், ஓடாமலும் செய்யும் வேலைகள்
தான் ஏதேனும் உண்டா ?
சிந்தீப்பீர் எம் பெண்டிரே !
ஆணுக்கு பெண் சரி நிகர்
சமானமாய் ஆவது எப்போது ?
உம் வளர்ச்சிக்கு தடையாய்
இருக்கும் புடவையை துறந்து
உமக்கேற்ற உடையில் நீர் புகும் போது !
உடுத்துபவருக்கு உகந்ததாய்
இருப்பதே உடை !
புடவை என்றுமே பெண்டிர் வளர்ச்சிக்கு தடை !

2 comments:

  1. //உடுத்துபவருக்கு உகந்ததாய்
    இருப்பதே உடை !
    புடவை என்றுமே பெண்டிர் வளர்ச்சிக்கு தடை !//

    டி சர்ட் போட்ட பாரதி வாழ்க.

    ReplyDelete
  2. ஆணாதிக்க சண்முகம்?

    ReplyDelete