Powered By Blogger

Tuesday, June 1, 2010

அலுவலகத்து சிசிடிவி கேமிரா !

நம்பிக்கை என்னும்
சொல்லின்
மரணத்தில்
ஜனித்த
நவீனத்தின் குழந்தை !

தனக்காய் பாடுபடும்
தொழிலாளியை
கண்கானிக்க இரு கண்கள்
போதாது என எண்ணும்
முதலாளியின்
மூக்கு கண்ணாடி !

என் அலுவலகத்து
பெண் மக்கள்
கலைந்த உடையை
சரி செய்யக்
கூட அச்சப்பட்டு
யாரோ பார்பதாய் எண்ணி
அஞ்சி மருக வைக்கும்
நவயுகத்தின் துச்சாதனன் !

இதயத்துக்கு இனியவர்கள்
அலைபேசியில் அழைத்தால்
ஐய்யோ பார்க்கிறானே
என பயந்து
மறைவிடத்திற்கு
ஓடி எனை
பேச வைத்த
உயிரில்லா உயரதிகாரி !

உழைப்பு உறிஞ்சும்
உலகமயத்தின்
உன்னத படைப்பாய்
அலுவலகங்களில் உயர்ந்து
நிற்கும் சுழலும் சூழ்ச்சிக்காரர்கள் !

கண்கானிப்பு கேமிராக்கள்
வைத்து உருப்படியாய்
ஏதும் செய்ததாய் தெரியவில்லை

அயராது உழைத்து 5
நிமிடம் தூங்கிப் போன
தொழிலாளியை
வேலை நீக்கம்
செய்ததை தவிர ?

5 comments:

  1. //அயராது உழைத்து 5
    நிமிடம் தூங்கிப் போன
    தொழிலாளியை
    வேலை நீக்கம்//

    உண்மையான வரிகள். கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Hi very true thoughts. Very nicely brought out in words!!! Hats off to your skills!

    ReplyDelete
  3. சிசிடிவி கவிதை நெஞ்சை நிறைத்தது.அருமை. நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை. ஆனால், தோழர் செம்மல், ஒரு விஷயத்தின் பல பரிமாணங்களையும் உள்ளடக்கிய முழுமையான கவிதைகளை படைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஒரே கோணத்தில் பார்க்கப்படும் விஷயங்கள் உச்ச படைப்பு என்ற உன்னத நிலைக்கு உயர்வதில்லை. எதுவும் விடுபடாத தன்மை, யாரும் பார்க்காத கோணம்,ஆங்காங்கே திடீர் திடீரென எழுந்து கண்சிமிட்டும் ஆச்சர்யங்கள் என விரைவில், அடுத்த நிலைக்கு முன்னேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை . வாழ்த்துக்கள் .

    ReplyDelete