Powered By Blogger

Wednesday, June 16, 2010

என்று தணியும் ?


கம்யூனிசம் வாழட்டும் !
இல்லை வீழட்டும் ?
காந்தியம்
பிழைக்கட்டும் !
இல்லை சாகட்டும் ?
அமெரிக்க ஏகாதிபத்தியம் !
வளரட்டும் இல்லை தளரட்டும் ?
மாநில அரசுகள்
மத்திய அரசை
சுரண்டட்டும் !
இல்லை வாரி
வழங்கட்டும் ?
உலக நாடுகள்
இந்தியாவை
போற்றட்டும் !
இல்லை தூற்றட்டும் ?
எதுவே வேண்டுமானாலும்
நடக்கட்டும் ?
எப்படி வேண்டுமானாலும்
போகட்டும் !
அய்யா பெரியவரே !
அரசியல் பிழைப்போரே !
நித்தமும் ஒரு வேளை உணவு
மட்டும் உண்டு
உறங்க போகும்
என் பல கோடி இந்திய
சொந்தங்களின்
பசி போக என்ன
செய்தீர்கள் ?
செய்வீர்கள் ?
புரட்சிக்கு அடிப்படை
என்னவென்று தெரியாது எனக்கு
ஆனால்
அடிப்படையில்
தனி மனித பசியே
புரட்சிக்கு விதை !
அரசில் பெரியோரே
ஆட்சியில் உள்ளோரே !
முடிவு செய்யுங்கள்
பசிக்கு தீர்வா ?
இல்லை புரட்சிக்கு..........?

5 comments:

  1. ச்சே, டச் பண்ணிட்டீங்க.

    ReplyDelete
  2. Valarattum ungal samooga pani!!! Vazhthukal!

    ReplyDelete
  3. “தனி மனித பசியே
    புரட்சிக்கு விதை !“

    தனி மனித பசி புரட்சிக்கு விதை என்பது சிறு துளி பெரு வெள்ளம் என்ற ஒப்புக்கொள்ளலாம், அப்படியானால் ஏன் ஆப்பிரிக்க நாடுகளில் புரட்சி வரவில்லை, இந்தியாவில் 70சதவீத மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள போது புரட்சி நடக்க வில்லை

    ReplyDelete
  4. மக்களே,
    நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

    இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs 2009 என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:

    வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete