Powered By Blogger

Tuesday, July 13, 2010

அலைபேசிகளுக்கு நன்றி


தந்தையை இழந்த சோகத்தில்
நின்றிருந்தான் தோழன்...

கிடத்தப்பட்டிருந்த சடலத்திற்கு
இறுதி மரியாதையை
சிறப்புடன் செய்து கொண்டிருந்தார்
இடுகாட்டு ஊழியர்...


அருகில் நின்றிருந்த
அனைவரிடத்திலும்
அமைதி மட்டுமே இருந்தது...


இறந்த மனிதனுக்கான
இறுதி மரியாதையென
அந்த
மௌனத்தை
பார்த்திருந்தேன்...

ஆனாலும்
எனக்குள் ஒரு பயம் !
இன்னும் சில நிமிடங்களில்
முடிய உள்ள
இறுதி காரியத்தில்

நான் எதிர்பார்த்த
அந்த
அசம்பாவிதம்
நடந்திடக் கூடாதே !

அனைவரிடமும் சொல்லி
தடுத்திட துடித்தது
மனம்...

சத்தமில்லாமல் சமிக்கைகள்
கொடுப்பது எப்படி?

ஒன்றும் புரியவில்லை !
நல்ல வேளை நிமிடங்களில்
முடிந்தது
காரியம்

இடுகாட்டு அறையில்
இருந்து வெளியேறி
பெரு மூச்சு விட்டபடி
நன்றி
சொன்னேன் !
யாருக்கு ?
துக்க காரியத்தின் போது
துள்ளல் பாட்டையோ ?
வடிவேலுவின்
நகைச்சுவை வசனத்தையோ ?
ரிங்டோனாக ஒலித்து
ஆழமாய் ஆதியிலிருந்த
அமைதியை
கெடுத்திவிடாத
அத்தனை
அலைபேசிகளுக்கும் !
அதனை அணைத்து
வைத்திருந்த
என் மனித நண்பர்களுக்கும் !


5 comments:

  1. A VERY DIFFERENT THOUGHT WRITTEN IN A DIFFERENT WAY!!!

    ReplyDelete
  2. தொலைபேசியை பெரும்பாலோனோர் தொல்லை பெசியாகவே மாற்றி வருகின்றனர்.

    பொது இடங்களிலோ, அலுவலகங்களிலோ, மற்றவர்கள் இருக்கும்போதோ எப்படி பேச வேண்டும் என்று சிறு பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக்கொடுப்பதுபோல மாக்களுக்கும் சொல்லவேண்டும்.

    குறிப்பாக அலுவலகங்களில்.

    ReplyDelete
  3. நண்பா உனது கவிதை எதார்த்ததைத் நச்சென்று பதிவு செய்துள்ளது, இப்போதெல்லாம் பெரும்பாலான செல்போன் கால்களை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். எனது ரிங்டோனையே மாற்றிவிட்டேன். பெரும்பாலானோருக்கு செல்போனில் பேச கற்றுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது,
    சில கெடுதிகளை மாற்ற வேண்டி உள்ளது

    ReplyDelete
  4. உண்மை நன்பா...
    அந்தரங்கம் தொலைத்த அகதிகள் நாம்....

    ReplyDelete
  5. உண்மை தான் சார் , இந்த ரிங்க்டோன் பல சமயங்களில் மிக கேவலமாக ஒலிக்கும்

    ReplyDelete