Powered By Blogger

Saturday, May 8, 2010

என்று நுழைவோம் ?




என் பாட்டன் காத்திருந்தான்
பன்னையார் அனுமதிக்கவில்லை...
என் தாத்தா காத்திருந்தார்
வெள்ளைக்காரன் அனுமதிக்கவில்லை...
என் தந்தை காத்திருந்தார்
அரசாங்கம் அனுமதிக்கவில்லை....
நானும் காத்திருக்கிறேன்
உன் வாசலில் நுழைய...
பரம்பரையாய் காத்திருந்தும்
பராசகத்தியே உன் கோவிலுக்குள்
நீ கூட எங்களை அனுமதிக்கவில்லையே ?

4 comments:

  1. என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  2. உண்மையை சொன்னாய் நண்பா. நாட்டார் தெய்வ வழிபாட்டில் கூட இத்தகைய தீண்டாமை உள்ளது. கிராமப்புறங்களில் ஒரே வேறுபாடு உள்ளது. தாழ்த்தப்பட்டவர் வைத்துள்ள கோவிலுக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சாதி ஆதிக்க சக்தியினர் சென்றுவரலாம். ஆனால் சாதி ஆதிக்கத்தினர் வைத்துள்ள கோவில்களில் எந்த சூழ்நிலையிலும் தாழ்த்தப்பட்டவர்கள் செல்ல முடியாது

    ReplyDelete
  3. very good simple and meaningful reflection of reality.

    ReplyDelete